VinayakOm
Home

Hindi - हिंदी

Tamil - தமிழ்

    கவிதை
         நீயின்றி உன்நாடேது
         பூரிப்பு
         அமிழ்தமா விஷமா

    பஜன்
         நானே தான் இறைவன்
         ஹரி நாராயண ஜப





ஹரி நாராயண ஜப மனமே

      ராகம்: சிவரஞ்சனி
              ஆ : ஸ, ரி2, க2, ப, த2, ஸ
              அவ : ஸ, த2, ப, க2, ரி2, ஸ




ஹரி நாராயண ஹரி நாராயண
ஹரி நாராயண ஜப மனமே


மாநித்வம் மறைந்திட தம்பித்வம் தகர்த்திட
ஹிம்சையை அழித்திட்டு அஹிம்சையில் நின்றிட
பொறுமை பெருகிட மன்னித்து பழகிட
த்யானத்தில் என்றென்றும் உன்னில் நிலைத்திட
        ஹரி நாராயண ஜப மனமே

வாக்கும் எண்ணமும் செயலும் ஒருங்கிட
குருவின் சேவையில் மகிழ்வை பெற்றிட
தூய்மை பழகிட உறுதியும் பெருகிட
த்யானத்தில் என்றென்றும் உன்னில் நிலைத்திட
        ஹரி நாராயண ஜப மனமே

கட்டுப் பாடுடன் அறிவை செலுத்திட
இந்த்ரிய போகத்தை தியாகத்தில் உயர்த்திட
அஹங்கார அவஸ்தையை முழுமையாய் துரந்திட
த்யானத்தில் என்றென்றும் உன்னில் நிலைத்திட
        ஹரி நாராயண ஜப மனமே

பிறப்பின் பயணத்தின் துக்கமும் தோஷமும்
அனுதினம் மனதில் த்யானித்துப் பழகிட
நான் எனதென்னும் எண்ணத்தை அழித்திட
த்யானத்தில் என்றென்றும் உன்னில் நிலைத்திட
        ஹரி நாராயண ஜப மனமே

இஷ்டமனிஷ்டதில் சமத்துவம் பழகிட
பக்தியை நிர்குண பகவனில் நிறுத்திட
தனிமை பழகிட அசங்கம் பயின்றிட
த்யானத்தில் என்றென்றும் உன்னில் நிலைத்திட
        ஹரி நாராயண ஜப மனமே