|
|
பூரிப்பு
கூட்டுக் குடியிருப்பில் வெறுமை கண்டேன்
தனிமையில் புகுந்து செல்வம் கண்டேன்
குடியிருப்பெங்கும் குப்பையை கண்டேன்
குற்றங்கள் பல அரசிடம் கண்டேன்
செல்வம் தனை முதலீடு செய்தேன்
லாபமும் நட்டமும் பெற்றிட செய்தேன்
வேலை வாய்ப்புக்கு வழியும் செய்தேன்
வரி செலுத்தி அரசின்பால் தொண்டும் செய்தேன்
க்ஷேத்திரத்தின் ஆதாரம் ஸ்தூலமும் சூக்ஷமமும்
காற்றுக்குத் தத்தளிக்கும் சிசுவிற்கு பால்போல்
சூக்ஷமத் தேவைக்கு ஸ்தூலம் கொடுத்து
மதர்ப்புடன் வாழ்ந்தேன் கடமையை புரிந்த
பூரிப்புடன்
| |