|
|
அர்ஜுனனா அபிமன்யுவா ?
உண்மை மறைந்தது உவமை நிலைத்தது
உவமைக்கு எண்ணில்லா உவமைகள் கொடுத்ததில்
நிலையற்றது நிலைத்தது; நிலையிழந்தன
உண்மையும் தர்மமும்.
முடமையே அறிவாகி, வெறுமை பெரு வளர்ச்சியாகி
போகித்தலே ஆனந்தமாகி, செய்தி ஒன்றே ஞானமாகி
செல்வமே இறைவனாகி, உயிரிருந்தும் மனிதன்
செலுத்தப்படும் பொம்மை ஆனான்.
குழந்தை கையில் பொம்மையாய் போற்றப்பட்டும்
அடுத்த கணமே நிராகரிக்கப்பட்டும்
குப்பையாய் ஓரோரத்தில் காத்திருக்கிறான்
அடுத்த முறைக்கு - ஒவ்வொரு முறையும்.
தனது க்ஷேத்திரத்தில் இழிவு கண்டு
பிற க்ஷேத்திரத்தில் உயர்வு கண்டு
கண்ணிருந்தும் குருடனாய், வ்யூஹத்திர்க்குள்
தன்னையே செலுத்திக்கொண்ட இவன்
அர்ஜுனனா அபிமன்யுவா ?
| |