|
|
நீயின்றி உன்நாடேது
எனது மடமையால் செல்வமிழந்தேன்
நேர்மையை மனதில் சுமந்து
கடல் கடந்தேன் கடனடைக்க
உழைப்பின் ஊதியத்தில் போகித்தேன்
சுற்றத்தினர் பலரும் புகழ
கடனையும் அடைத்தேன்
பிற க்ஷேத்திரத்தின் வளர்ச்சிக்கு
நேர்மையாய் பணிபுரிந்து மேன்மேலும்
செல்வம் சேர்த்தேன்
தனது க்ஷேத்திரத்தின் பால்
மனதில் சுமந்த பற்றுடன்
கேள்விகளை எழுப்பினேன்
எந்நாட்டின் பொருளாதாரம் என்றுயரும்?
வறுமை ஏன் நீங்கவில்லை?
வாய்ப்புகள் வந்து உயர்த்தாதா?
இவை பற்றால் எழுந்த கேள்விகளல்ல
வெறுமையில் எழுந்த கெக்களிப்பே
மூடனே நீயின்றி உன்நாடேது
| |