|
|
அமிழ்தமா விஷமா
பின்னிப் பிணைந்து ஒன்றாய் இணைந்து
ஒன்றுக்கொன்று உறவுடன் திகழ்ந்து
தன்னுள் தவித்தும் கூட்டில் வளர்ந்து
பிறப்பும் இறப்பும் நிகழ்ந்த போதிலும்
நிலைத்திங்கு வாழுமடா உனது க்ஷேத்திரம்
இன்பமும் துன்பமும் நட்பும் பகைமையும்
கல்வியும் செல்வமும் வறுமையும் கொடுமையும்
வெற்றியும் தோல்வியும் லாபமும் நட்டமும்
நியதியின் அணைத்து இயல்பும் நிறைந்து
நிலைத்திங்கு வாழுமடா உனது க்ஷேத்திரம்
அரசும் திறனும் மொழியும் மதமும்
கல்வியும் கலையும் வீரமும் சேவையும்
கர்மமும் போகமும் ஞானமும் விஞானமும்
த்ரிகுணமே சத்தியமாய் மோக்ஷத்தில் முடிவின்றி
நிலைத்திங்கு வாழுமடா உனது க்ஷேத்திரம்
க்ஷேதிரதிர்க்கு பெருமையிலா தனி மனித வெற்றி தனை
இருளளிக்கும் க்ரிஹணம் போல் கவனத்துடன் நோக்கிடு
செய்திக்குள் க்ஷேத்திரத்தின் நிந்தனையை எதிர்த்திடு
க்ஷேத்திர திறமையை தம்பதுடன் வளர்த்திடு
பெருமையளிக்கும் தோல்வியையும் மதிப்புடன் நோக்கிடு
அங்கஹீனம் அடைந்தபின் குறையுற்ற தன் உடலில்
பலஹீனம் பல கண்டு தாமசத்தில் மனம் வைத்து
தன்னிலை மறந்த பல அங்கங்களுடன் க்ஷேத்திரமிருக்க
கூடு விட்டு கூடு பாய்ந்து வேருடலில் சுகம் கண்டு
அங்கத்திற்கிதமாய் உடலுக்கு விஷமமாய் கொணர்ந்தளித்த
உன் மருந்து அமிழ்தமா விஷமா?
| |