VinayakOm
Home

Hindi - हिंदी

Tamil - தமிழ்

    கவிதை
         நீயின்றி உன்நாடேது
         பூரிப்பு
         அமிழ்தமா விஷமா

    பஜன்
         நானே தான் இறைவன்
         ஹரி நாராயண ஜப





நானே தான் இறைவன்

      ராகம்: மோகனம்
              ஆ : ஸ, ரி2, க3, ப, த2, ஸ
              அவ : ஸ, த2, ப, க3, ரி2, ஸ




நானே தான் இறைவன்
ஒன்றாய் பலவாய் எதிலும் விளங்கும்
நானே தான் இறைவன்

கதிராய் மழையாய் காற்றாய் நிலமாய்
விதையாய் உறமாய் பயிராய் மரமாய்
வேறாய் கிளையாய் இலையாய் மலராய்
காயாய்க் கனியாய் உணவாய் விளங்கும் (நானே..)

கல்லாய் சிலையாய் மண்ணாய்ப் பொருளாய்
பொன்னாய் நகையாய் பஞ்சாய் உடையாய்
மரமாய் ஏடாய் பாலாய் நெய்யாய்
விதையாய் செயலாய் பலவாய் விளங்கும் (நானே..)

கனவாய் விழிப்பாய் பொய்யாய் மெய்யாய்
ஒளியாய் ஒலியாய் நிழலாய் இருளாய்
மனமாய் மதியாய் பலமாய்த் திறனாய்
அகமாய்ப் புறமாய் உயிராய் விளங்கும் (நானே..)